கண்ணயர்ந்து உறங்கிய மகன்...தாய்மை பொங்க நயன்தாரா வெளியிட்ட கியூட் வீடியோ!


நயன்தாரா

தன் மகன் கண்ணயர்ந்து உறங்கிய போது, மடியில் வைத்துக்கொண்டு தாய்மை பொங்க நயன்தாரா முத்தம் கொடுத்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

குழந்தைகளுடன் நயன்தாரா...

நடிகை நயன்தாரா சினிமா, பிசினஸ் என பிஸியாக வலம் வருகிறார். இவ்வளவு பரபரப்புக்கு மத்தியிலும் தன் மகன்களுடன் நேரம் செலவிட அவர் தவறுவதில்லை. தனது மகன்கள் உயிர் மற்றும் உலக்குடன் நேரம் செலவிடும் புகைப்படங்களையும், கியூட்டான வீடியோக்களையும் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நயன்தாரா பகிர்ந்து வருகிறார்.

நடிகை என்ற பந்தா இல்லாமல் தன்னுடைய குழந்தைகளுக்கு எல்லா வேலைகளையும் தான் செய்ய வேண்டும் என்று நயன்தாரா நினைப்பார் என அவரது கணவர் விக்னேஷ் சிவன் முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் தற்போது 'எல்ஐசி' படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.

இந்த படப்பிடிப்பின் முதல் செட்யூல் முடிவு பெற்று தற்போது பிரேக்கில் நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருகிறார். இவர்கள் நால்வரும் தற்போது வெளியே சென்றுள்ளனர்.

அப்போது, தன்னுடைய குழந்தை கண்ணயர்ந்து உறங்கும்போது மடியில் வைத்து அதற்கு முத்தமிடும் கியூட்டான வீடியோவை நயன்தாரா வெளியிட்டுள்ளார். குழந்தையுடன் இப்படி செலவிடும் நேரம் பேரின்பமாக இருப்பதாகவும் தன்னுடைய கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே உயிர், உலக் என இரண்டு குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்று எடுத்தனர். இந்த விஷயம் அந்த சமயத்தில் பரபரப்பையும், சர்ச்சையும் ஏற்படுத்தியது. அதற்கெல்லாம் சட்டரீதியாக அவர்கள் இருவரும் பதில்ளித்து தங்கள் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

x