இங்கிலாந்து பிரதமருடன் மனிஷா கொய்ராலா சந்திப்பு! 


இங்கிலாந்து: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை, பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா நேரில் சந்தித்துள்ளார். “எவரஸ்ட் மலையேற்றத்துக்கு அழைப்பு விடுத்தேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

மனிஷா கொய்ராலா நேபாளம் நாட்டைச் சேர்ந்தவர். அந்நாட்டுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ‘நட்பு ஒப்பந்தம்’ கையெழுத்தாகி 100 ஆண்டுகள் முன்னிட்டு அதனை கொண்டாடும் வகையிலான நிகழ்வுக்கு பிரதமர் ரிஷி சுனக் ஏற்பாடு செய்திருந்தார். இதில் நேபாளம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அந்நிகழ்வில் நடிகை மனிஷா கொய்ராலா கலந்துகொண்டார்.

இது தொடர்பாக மனிஷா கொய்ராலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இங்கிலாந்து - நேபாளம் இடையிலான உறவு மற்றும் ‘நட்பு ஒப்பந்தம்’ 100 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், அது தொடர்பான கொண்டாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததை கவுரவமாக கருதுகிறேன்.

பிரதமர் ரிஷி சுனக், நேபாளத்தைப் பற்றி அன்புடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. எவரஸ்ட் மலையேற்றத்துக்கு வருவமாறு பிரதமர் மற்றும் அவரது குடும்பத்துக்கு அழைப்பு விடுத்தேன்” என்றார். மேலும், தன்னுடைய ‘ஹீராமண்டி’ வெப்சீரிஸை பார்த்து அங்கிருந்தவர்கள் பாராட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

x