'சாரி, இந்த கேள்வி கேக்காதீங்க'... டென்ஷனான ரஜினிகாந்த்!


ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்திடம் விஜய், விஷால் அரசியல் வருகை குறித்து எழுப்பப்பட்ட கேள்வி அவரைக் கோபப்படுத்தியுள்ளது. இதற்கு அவர் கூறியுள்ள பதில் வைரலாகியுள்ளது.

'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த்

'லால் சலாம்’ படம் வெளியானதை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ படத்தில் பிஸியாகி உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினி சென்னை திரும்பினார்.

அப்போது விமான நிலையத்தில் அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார். ‘லால் சலாம்’ வரவேற்புக் குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, படம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டதாகவும் இயக்குநர் ஐஸ்வர்யா மற்றும் தயாரிப்பு நிறுவனம் லைகாவுக்கும் நன்றி தெரிவித்தார்.

பின்பு அவரிடம், ‘விஜயை அடுத்து விஷாலும் கட்சி தொடங்கப் போகிறார். நடிகர்கள் இப்படி கட்சி தொடங்கி முதல்வராக ஆசைப்படுகிறார்கள். முதல்வர் பதவி என்ன அவ்வளவு இலகுவானதா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த்...

இதனால் அப்செட்டான ரஜினி, “சாரி! இந்தக் கேள்வி இப்போதைக்கு வேண்டாம்” என்றவர், ‘வேட்டையன்’ படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்டது என்றும், இந்தப் படத்தை முடித்த பிறகே இயக்குநர் லோகேஷ் கனகராஜூடைய படம் ஆரம்பிக்கும் என்றும் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

x