நடிகர் மாரிமுத்து மறைவால் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு புது சிக்கல் வந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய சீரியல் ‘எதிர்நீச்சல்’. இதன் கதைக்களத்திற்காக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும் இதில் வரும் எதிர் கதாபாத்திரமான ஆதி குணசேகரன் ரசிகர்கள் மனம் கவர்ந்த ஒன்றாக இருந்தது.
இதற்கு முக்கியக் காரணம் நடிகர் மாரிமுத்துவின் நடிப்பும் அவரது வசன உச்சரிப்பும்தான். ஆனால், அவரது எதிர்பாராத மரணம் அந்த ரசிகர்களுக்கு மட்டுமல்ல சீரியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகவே இருந்து வருகிறது. ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிகர் வேலராமமூர்த்தி நடித்து வந்தாலும் அவரது மற்ற கமிட்மென்ட்ஸ் காரணமாக அவரால் இந்த சீரியலில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தை முழுமையாக ஏற்க முடியவில்லை.
அந்த கதாபாத்திரமும் வலுவில்லாமல் போய்விட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இதனால், இவ்வளவு நாளாக முதலிடத்தில் இருந்த ‘எதிர்நீச்சல்’ சீரியல் 9.55 டி.ஆர்.பி. பெற்று ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 10.40 டி.ஆர்.பியை பிடித்து முதல் இடத்தில் ’வானத்தைப் போல’ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி!