நடிகை மேகா ஆகாஷூக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!


நடிகை மேகா ஆகாஷூக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் ’பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். பின்பு, கெளதம் மேனனின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் மூலம் பிரபலமானார். அதன் பிறகு தமிழில் இவர் நடித்த சில படங்கள் பெரிதாக வரவேற்பு பெறாமல் போனது. தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கிலும் படங்கள் நடித்து வந்தார். இப்போது சத்தமே இல்லாமல் தனது நீண்ட நாள் காதலர் சாய் விஷ்ணுவுடன் திருமண நிச்சயதார்த்தத்தை நேற்று முடித்துள்ளார் மேகா ஆகாஷ்.

உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் கேரளாவில் எளிமையாக நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்தப் புகைப்படங்களை மேகா ஆகாஷ் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ‘என்னுடைய விஷ் (Vish) உண்மையாகி உள்ளது’ என்றும் தனது மகிழ்ச்சி, சந்தோஷம், சிரிப்பு எல்லாமே இவர் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களும் திரைத்துறையினரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.

A post shared by Megha Akash (@meghaakash)

x