இந்தியாவை தவறாக சித்தரிக்கிறார்கள்: பாலிவுட் மீது ரிஷப் ஷெட்டி பாய்ச்சல்


‘காந்தாரா' மூலம் பிரபலமானவர், கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி. இந்தப் படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இவர் பிரமோத் ஷெட்டி நடித்துள்ள ‘லாஃபிங் புத்தா’ என்ற படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படம் தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இந்தி படங்கள் இந்தியாவை எதிர்மறையாக சித்திரிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “இந்திய படங்கள், குறிப்பாக இந்திப் படங்கள் இந்தியாவை தவறாக காட்டுகின்றன. கலைப் படம் என்ற பெயரில் அவற்றுக்கு சர்வதேச விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகின்றன. என் தேசம், என் மாநிலம், என் மொழி என்பது என் பெருமை. அதை ஏன் நேர்மறையாக காட்டக் கூடாது? அதைத்தான் நான் செய்ய முயற்சிக்கிறேன்” என்று தெரித்துள்ளார்.


ரிஷப் ஷெட்டியின் இந்த கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தி சினிமா ரசிகர்கள் சிலர், ‘காந்தாரா’ படத்தில் நாயகி சப்தமி கவுடாவின் இடுப்பை, ரிஷப் ஷெட்டி கிள்ளும் காட்சியை வெளியிட்டு, “உங்கள் படங்களில் இதுபோன்ற காட்சிகளை நிறுத்துங்கள். இது கேவலமாக தெரிகிறது. பின்னர் பெருமைபடலாம்” என்றும் “காந்தாரா மிகைப்படுத்தப்பட்ட திரைப்படம், ஒரு படம் ஹிட்டானதால் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் என நினைக்க வேண்டாம்” என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

x