மம்முட்டி-ஜோதிகா நடித்துள்ள மலையாளப் படம் எப்போது வெளியாகிறது என்பது குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்குப் பிறகு சிறிய பிரேக் எடுத்துவிட்டு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ள ஜோதிகா கமர்ஷியல் படங்களை எடுக்காமல் பெண்களை மையப்படுத்திய கதை மற்றும் கதையில் தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகள் இவற்றையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாது தயாரிப்பிலும் கவனம் செலுத்துகிறார் ஜோதிகா. இந்த நிலையில், அவர் மம்முட்டியுடன் இணைந்து மலையாளத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் இந்தப் படம் மூலம் ரீ-என்ட்ரிக் கொடுக்கிறார் ஜோதிகா. குறிப்பாக கடந்த 2009ம் ஆண்டு மம்முட்டியுடன் இணைந்து ‘சீதா கல்யாணம்’ என்றப் படத்தில் நடித்தார். அதன் பிறகு 13 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இணைகிறார். ‘காதல் தி கோர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
முதலில் ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகிறது. ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜோ பேபிதான் இந்தப் படத்தின் இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...