ரச்சிதாவால் மோசமாக மாறிய வாழ்க்கை... மேடையிலேயே கண்கலங்கிய தினேஷ்!


பிக் பாஸில் தினேஷ்

ரச்சிதாவால் தன் வாழ்க்கை மோசமாக மாறிவிட்டது என தினேஷ் நேற்று பிக் பாஸ் மேடையில் கண்கலங்கி பேசியுள்ளார்.

பிக் பாஸ் தமிழின் ஏழாவது சீசனில் முதல் முறையாக நேற்று ஐந்து பேர் வைல்ட் கார்டில் ஒரே நேரத்தில் உள்ளே நுழைந்துள்ளனர். முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட, அதைத் தொடர்ந்து பவா செல்லதுரையும் வெளியேறினார். மூன்றாவது வாரத்தில் ‘பாரதி கண்ணம்மா’ புகழ் வினுஷா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனாக யுகேந்திரன் மற்றும் வினுஷா நேற்று வெளியேறினர். தற்போது தினேஷ், ‘ராஜா ராணி’ அர்ச்சனா, கானா பாலா, ஆர்.ஜே. பிராவோ, அன்னபாரதி ஆகிய ஐந்து பேர் வைல்ட் கார்டில் நுழைந்திருக்கிறார்கள். இவர்களால், பிக் பாஸ் வீட்டில் என்ன மாற்றம் நிகழப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தினேஷ்

இந்த நிலையில் மேடையில் தினேஷ் வந்தபோது, “என் வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டு இருந்தது. ஆனால், வாழ்க்கையில் திடீரென ஒரு சறுக்கல் ஏற்பட்டு திடீரென எட்டு வருடம் பின்னால் போய்விட்டது போன்ற ஒரு உணர்வு எனக்கு இருக்கிறது. வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்று சொல்வார்கள். ஆனால், இந்த அளவுக்கு மோசமான ஒரு நிலையை வாழ்க்கை எனக்கு கொடுக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என ரச்சிதாவைப் பிரிந்தது பற்றி மறைமுகமாகக் கூறினார்.

பிக் பாஸ் டைட்டிலை வெல்ல வேண்டும் என்ற ரச்சிதாவின் ஆசையை நிறைவேற்றவே தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் போனார் என்கின்றனர் அவரது நண்பர்கள் வட்டாரம்.

x