சென்னையில் 'தக் லைஃப்’ படப்பிடிப்பு: சிம்புவைப் பார்க்க குவிந்த ரசிகர்கள்!


சென்னையில் நடந்து வரும் ‘தக் லைஃப்’ படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் சிம்புவின் ரசிகர்கள் அவரைப் பார்க்க குவிந்துள்ளனர்.

மணி ரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், த்ரிஷா, சிம்பு உள்ளிட்டப் பலர் நடித்து வரும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இயக்குநர் தேசிங்கு பெரியசாமியுடன் சிம்பு இணையும் ‘எஸ்.டி.ஆர். 48’ படத்திற்கான கெட்டப்பிலேயே ‘தக் லைஃப்’ படத்திலும் நடித்துள்ளார் சிம்பு.

டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், தற்போது சென்னையில் படப்பிடிப்பை நடந்து வருகின்றது.

சென்னை தி.நகர் பகுதியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு தளத்திற்கு நேற்று சிம்பு வந்திருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. தி.நகரில் சிம்புவைக் காண ரசிகர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். சென்னையை அடுத்து அயர்லாந்திற்கு படக்குழுவினர் செல்ல உள்ளனர். ‘தக் லைஃப்’ படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இந்த வருட இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

x