நடிகை நந்திதா ஸ்வேதா திருப்பதியில் சுவாமி தரிசனம்!


நடிகை நந்திதா ஸ்வேதா

நடிகை நந்திதா ஸ்வேதா திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

’அட்டக்கத்தி’, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற படங்களில் நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. குறிப்பாக, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் இவரது குமுதா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படியான சூழ்நிலையில்தான், சமீபத்தில் தான் வினோதமான தசை அழற்சி நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் நந்திதா.

நடிகை நந்திதா ஸ்வேதா

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘பைப்ரோமியால்ஜியா’ என்ற தசை கோளாறால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். இது என் உடல் எடையை கடுமையாக குறைத்துள்ளது. ஒரு சிறிய வேலை செய்தால் கூட என்னுடைய தசைகளில் இது பிரச்சினையை ஏற்படுத்தும். இதனால், அதிக கடினமான வேலைகளையும் உடற்பயிற்சியும் என்னால் செய்ய முடியாது. இத்தனை வலிகளை மீறி படத்திற்காக வேலை செய்கிறேன்” என்றார்.

இப்படியான சூழ்நிலையில்தான் நடிகை நந்திதா திருப்பதியில் சுவாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, ஊடகத்திடம் அவர் பேசியதாவது, “நல்லபடியாக சுவாமி தரிசனத்தை முடித்து விட்டேன். 2024ம் வருடம் தொடங்கி இருக்கிறது. மேலும் ஆந்திராவில் சர்வதேச திரைப்பட விழா நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக, இப்போது நான் வந்தேன். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் நல்ல படங்கள் நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பு எப்போது இருக்கும் மற்றும் அடுத்தடுத்த விவரங்கள் வெளியாகும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

x