கத்ரீனாவுடன் குளியலறை சண்டைக்காட்சி... காவியம் என வர்ணித்த ஹாலிவுட் நடிகை!


’டைகர்3’ படத்தில்...

’டைகர்3’ படத்தில் கத்ரீனா கைஃப் உடனான சண்டைக் காட்சியை பிரபல ஹாலிவுட் நடிகை காவியம் என வர்ணித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

சல்மான் கான் நடிப்பில், யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் சார்பில், ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் மனீஷ் சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டைகர் 3’ திரைப்படம் இந்தவருட தீபாவளி ரிலீஸாக வரும் நவம்பர் 12ம் தேதி ஞாயிறன்று இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், இதில் கத்ரீனா- மிஷ்ஷேல் லீ இடையிலான சண்டைக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. கத்ரீனாவுடனான இந்த சண்டைக் காட்சியை காவியம் என மிஷ்ஷேல் லீ வர்ணித்துள்ளார்.

’டைகர்3’ படத்தில்...

இதுகுறித்து மிஷ்ஷேல் லீ பகிர்ந்திருப்பதாவது, “இதை நாங்கள் இதை படமாக்கியபோது அழகான காவியமாக இருந்தது. இரண்டு வாரங்களுக்கு மேல் நாங்கள் இந்த சண்டைக்காட்சிக்காக பயிற்சி எடுத்து படமாக்கினோம். கத்ரீனாவால் அழகாகவும் தொழில்முறை நடிகையாகவும் இருக்க முடிந்தது. நடனத்தில் அவருக்கு அனுபவம் இருந்ததால் அவருடன் இணைந்து பணியாற்றுவது ரொம்பவே எளிதாக இருந்தது” என்றார்.

'டைகர்3’ படத்தில்...

மேலும் அவர் பகிர்ந்திருப்பதாவது, “டவல்கள் குறிப்பிட்ட சரியான இடங்களில் பொருந்தியிருக்க வேண்டியிருந்தது. அதனுடன் அதிகப்படியான நகர்வுகளுடன் இந்த சண்டைக்காட்சியை படமாக்கியது நிச்சயமாக சவால்தான். சில நேரங்களில் டவல்களின் முக்கிய பகுதி கிழிந்துபோய் அதை தைத்து பயன்படுத்தியதும் எங்களுக்கு உதவிகரமாக இருந்தது. இன்னொரு சவால் என்னவென்றால், பார்ப்பதற்கு அபாயகரமானதாகவும் வலிமையானதகவும் தெரிந்தாலும் ஒருவருக்கொருவர் எங்களை காயப்படுத்தி விடாமல் இருப்பதற்காக நாங்கள் ஒருவருக்கொருவர் ஒரு சரியான தூரத்தை கடைபிடிக்க வேண்டி இருந்தது. ஒருவேளை அப்படி அவரை நிஜமாகவே நான் தாக்கியிருந்தால் உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா ?

ஆனால் நான் தொழில்முறை தெரிந்தவள். அதனால் நாங்கள் எங்களை தாக்கிக்கொள்ளாமலேயே கேமரா முன்பாக அந்த வேலையை செய்ய வேண்டி இருந்தாலும், அனைத்தும் ரொம்பவே மென்மையாக நடந்தன” என்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

x