தன் நண்பன் கவினுக்காக பிரதீப் ஆண்டனி ஹிட் படம் ஒன்றின் வாய்ப்பை விட்டுக் கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ்7 போட்டியாளர்களில் ஒருவராக பிரதீப் ஆண்டனி உள்ளே நுழைந்திருக்கிறார். இவர் 'அருவி', 'டாடா' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக, 'டாடா' படத்தின் வெற்றி இவருக்கு மேலும் புகழைத் தந்தது. நடிகர் கவினின் நண்பரான பிரதீப் 'டாடா' படத்திலும் அப்படியான ஒரு ரகளை கதாபாத்திரத்தில்தான் நடித்திருப்பார். இப்படி இருக்கையில் இந்தப் படத்தில் கவின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரதீப்தான் என்றத் தகவல் வெளியாகியுள்ளது.
'டாடா' படத்தின் கதை கேட்டு முடித்தவுடன், இந்தப் படம் தன்னை விட கவினுக்குத் தான் சரியாக இருக்கும், அவனை வைத்து இந்த படத்தை எடுங்க என்று இயக்குநரிடம் கூறினாராம் பிரதீப். ஹீரோ ரோலுக்கு பதிலாக படத்தில் இருக்கும் வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். இந்த தகவலை பிரதீப்பின் நண்பர் ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.