நெகிழ்ச்சி... மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு சிலை வைத்த ரசிகர்கள்!


நடிகர் மாரிமுத்து

மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு ரசிகர்கள் சிலை வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் புகழ்பெற்ற நடிகராக விளங்கியவர் நடிகர் மாரிமுத்து. இவருக்கு 'எதிர்நீச்சல்' சீரியல் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைய செய்தது. குறிப்பாக, இவரது 'ஏய்... இந்தாம்மா' வசனத்திற்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிந்தபோது, திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு தானே கார் ஓட்டிச் சென்றபோது மருத்துவமனை வளாகத்தை சென்றடைந்த அவர் மரணமடைந்தது தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் 'எதிர்நீச்சல்' சீரியலில் அவருடைய ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிகர் வேல்ராமமூர்த்தி நடித்தார். ஆனால் அவரது பிஸி ஷெட்யூல் காரணமாக சில எபிசோடுகள் மட்டுமே அவரால் வர முடிந்தது. அதன் பிறகு ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தின் டிராக்கை வேறு மாதிரி மாற்றிவிட்டார்கள். அதனால் ரசிகர்கள் மத்தியில் வருத்தம் ஏற்பட்டது. இந்த நிலையில் மறைந்த மாரிமுத்துவுக்கு சிலை அமைத்துள்ளனர்.

நடிகர் மாரிமுத்துவுக்கு சிலை

இந்நிலையில், விழுப்புரத்தில் நடிகர் மாரிமுத்துவுக்கு பாஜகவினர் சிலை வைத்துள்ளனர். மறைந்த நடிகர் மாரிமுத்து மற்றும் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கும் சிலை வைத்துள்ளனர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x