பெரும் காலத்தின் மனசாட்சி... மகாத்மா காந்திக்கு கமல்ஹாசன் புகழாரம்!


கமல்ஹாசன்

ஒரு பெரும் காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்கள் அபூர்வம். அவர்களில் முதன்மையானவர் காந்திப் பெருமகனார் என்று நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தி

அகிம்சை என்ற ஆயுதம் கொண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக போராடியவர் மகாத்மா காந்தி. அவர் கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி டெல்லி பிர்லா மாளிகையில் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காந்தியின் படுகொலை செய்யப்பட்ட நாள், இந்தியா முழுவதும் தேச பக்தர்களாலும், காந்தியவாதிகளாலும் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கொள்ளப்படுகிறது. மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினமான இன்று அவரின் புகழ் குறித்து பலர் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், காந்தி நினைவு நாளை முன்னிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்,"தான் வாழும் சமூகத்திற்குப் பாடுபட்டவர் உண்டு. தேச அளவில் தொண்டு செய்ய எழுந்தோர் உண்டு. ஆனால், ஒரு பெரும் காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்கள் அபூர்வம். அவர்களில் முதன்மையானவர் காந்திப் பெருமகனார். அன்னாரின் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக" என்று பதிவிட்டுள்ளார்.

x