‘அண்ணன் வரார் வழிவிடு’ - வெளியானது விஜயின் 'GOAT' பட டிரெய்லர்!


சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள 'GOAT' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர்கள் விஜய், பிரஷாந்த், சிநேகா, லைலா, பிரபுதேவா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் 'GOAT' திரைப்படம் அடுத்த மாதம் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனையடுத்து படத்தின் புரோமோஷன் பணிகளை படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது. யுவன் இசையில் இதுவரை படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியானது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருப்பதால், இதன் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரா அமைப்பு ஒன்றின் சிறப்பு பிரிவில் வேலை செய்யும் சிலர் செய்யும் விஷயங்கள் பின்னாளில் அவர்களுக்கு எப்படி பெரிய பிரச்சினையாக மாறுகிறது என்பதுதான் 'GOAT' படத்தின் ஒன்லைன் என்பதை இயக்குநர் வெங்கட்பிரபு முன்பு சொல்லியிருந்தார். இந்த விஷயங்களே டிரெய்லரில் ஹைலைட் ஆகியுள்ளது. விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், ஜெயராம் என எல்லோரும் ஒரு குழுவில் இருக்கிறார்கள். இதில் காந்தி என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருக்கிறார். ஃபீல்ட் ஏஜெண்ட், ஸ்பையாக இருக்கும் விஜய்க்கு ஒரு அசைமெண்ட் செய்து முடிக்கும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது.

அதில் அங்கு அவர் செய்யும் விஷயங்கள் பின்னாளில் அவருக்கு பிரச்சினையாக அப்பா-மகன் இருவரும் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதை. இதில் அப்பா-மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய். அப்பா விஜய்க்கு ஜோடியாக சிநேகா நடித்திருக்க, மகன் விஜய்க்கு ஜோடி மீனாட்சி செளத்ரி. பாடல்களில் ஏமாற்றிய யுவன், டிரெய்லர் பின்னணி இசையில் ரசிகர்களின் பல்ஸ் பிடித்திருக்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட்ஸ் அசரடிக்கிறது. மகன் விஜயின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் திருப்திகரமாக இல்லை என சொல்லி வருகின்றனர் ரசிகர்கள். மோகனின் வில்லன் அவதாரம், அண்ணே வரார் வழிய விடு, டிரெய்லர் இறுதியில் வரும் ‘கில்லி’ படத்தின் சீன் ரீமேக் போன்றவை ரசிகர்களுக்கான தருணங்களாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

x