கார்த்தி படத்தில் மீண்டும் ரஜிஷா விஜயன்


கார்த்தி நடித்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம், ‘சர்தார்’. பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். ராஷிகண்ணா, லைலா உட்பட பலர் நடித்தனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘சர்தார் 2’ என்ற பெயரில் உருவாகிறது. மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் 3 நாயகிகள் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு நாயகியாக ரஜிஷா விஜயன் இணைந்துள்ளார். இதை பிரின்ஸ் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. ரஜிஷா விஜயன் ‘சர்தார்’ முதல் பாகத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

x