‘மழை பிடிக்காத மனிதனி’ல் சத்யராஜ்


சென்னை: விஜய் ஆண்டனி, சரத்குமார் இணைந்து நடித்துள்ள படம், ‘மழை பிடிக்காத மனிதன்’. விஜய் மில்டன் இயக்கியுள்ளார். கன்னடஹீரோ ‘டாலி’ தனஞ்ஜெயா, மேகா ஆகாஷ், முரளிசர்மா, சரண்யா என பலர் நடித்துள்ளனர்.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி.லலிதா, பி.பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா தயாரித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 29-ம் தேதி இதன் டீஸர் வெளியாகிறது. இதில் மறைந்த விஜயகாந்தை கவுரவ வேடத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. இப்போது அந்த கேரக்டரில் சத்யராஜ் நடித்துள்ளார்.