நான் சாகும்வரை முஸ்லிம் தான் என நடிகை குஷ்பு பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் துறவிகள், அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர். கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்களது சமூகவலைதளம் மூலமாகவும் வாழ்த்துக் கூறினர்.
நடிகை குஷ்பு இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. மாறாக, கடவுள் ராமர் மீதான பக்தியை வெளிப்படுத்தியும், இந்த நிகழ்வை நடத்தி முடித்த பிரதமர் மோடியை வாழ்த்தியும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக் கூறியிருந்தார் குஷ்பு.
குஷ்பு முன்பு பதிவிட்டிருந்த பதிவில், ‘நான் இறக்கும் வரை முஸ்லிம்’ எனக் கூறியிருந்தார். ஆனால், இப்போது ராமர் மீது பக்தி என்கிறாரே என ரசிகர் ஒருவர் அவருடைய முந்தைய பதிவை எடுத்துப் போட்டு குஷ்புவை டேக் செய்திருந்தார்.
இதற்கும் பதிலளித்துள்ள குஷ்பு, ‘இப்போதும் சொல்கிறேன். நான் முஸ்லிமாகத்தான் இறப்பேன். என் மதத்தை நான் இப்போது வரையிலும் மாற்றிக் கொள்ளவில்லை. உங்களைப் போல சிலருக்குத்தான் கடவுள் மதம் சார்ந்தவர். ஆனால், நான் கடவுள் என்பது ஒருவர்தான் என நினைக்கிறேன்.
ராமர் அனைவராலும் வணங்கப்படுகிறார். உங்கள் எண்ணங்களை விரிவுபடுத்துங்கள். நீங்கள் இதைப் பற்றி புரிந்து கொள்வீர்கள்’ எனப் பதிவிட்டுள்ளார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தைப்பூச ஜோதி தரிசனம்... வடலூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
அதிர்ச்சி... காதல் திருமணம் செய்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் உயிரிழப்பு!
பட்ஜெட்டில் பென்ஷன்தாரர்களுக்கு குட் நியூஸ்... புதிய சலுகைகளுக்கு மத்திய அரசு பரிசீலனை!
பிரபல தொலைக்காட்சி செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!
நிதி நெருக்கடியில் தவிக்கும் பிரபல நிறுவனம்.. ₹ 8,245 கோடி இழப்பு!