பரபரப்பு... பிரபல பாஜக நடிகை சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு!


நடிகை ஜெயப்பிரதா

திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இஎஸ்ஐக்கான தொகையை செலுத்தாத வழக்கில் பிரபல நடிகையும், பாஜக முன்னாள் எம்.பியுமான ஜெயப்பிரதாவிற்கு விதிக்கப்பட்ட 6 மாதச்சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அத்துடன் 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவிட்டுள்ளது.

கமல்ஹாசனுடன் ஜெயப்பிரதா

இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்தவர் ஜெயப்பிரதா. தமிழில் ’நினைத்தாலே இனிக்கும்’, ‘சலங்கை ஒலி’, ‘தசாவதாரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

ஜெயப்பிரதா

இந்த நிலையில் சென்னை, அண்ணா சாலையில் திரையரங்கம் ஒன்றை ஜெயப்பிரதா நடத்தி வந்தார். அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியத்தில் இஎஸ்ஐ தொகை பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

ஆனால் அவரது திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் ஜெயப்பிரதா செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நடிகை ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகம் வழக்கு தொடர்ந்தது.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கை எதிர்த்து ஜெயப்பிரதா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த சூழலில் இந்த வழக்கை இன்று விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து ஆக.11-ம் தேதி உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயப்பிரதா மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் ஜெயப்பிரதாவிற்கு விதிக்கப்ப்டட 6 மாதச் சிறைத்தண்டனையை உறுதி செய்துள்ளது.

அத்துடன் ஜெயப்பிரதா ரூ.20 லட்சம் டெபாசிட் செய்வும், 15 நாட்களில் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடையும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்

x