தேசிய விருதுகள் அறிவிப்பு: 4 விருதுகளைக் குவித்த ‘பொன்னியின் செல்வன்’


சென்னை: எழுபதாவது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. எந்தெந்த படங்களுக்கு, நடிகர்களுக்கு விருதுகள் கிடைத்தது என்பதைப் பார்க்கலாம்.

ஒவ்வொரு வருடமும் பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்படும். இடையில் கரோனா காரணமாக ஒரு வருடம் அறிவிக்காமல் இருந்தார்கள். அதனால், இந்த வருடம் நடைபெறும் 70வது திரைப்பட விருதுகள் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கு மதியம் 1.30 மணி முதலே அறிவிக்கப்பட்டது. விருதுகள் மட்டுமே இன்று அறிவிக்கப்படுகிறது. விருது விழா அக்டோபர் மாதம் நடைபெறுகிறது.

இதில் தமிழில் ‘பொன்னியின் செல்வன்1’ திரைப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ’குல்முஹர்’ திரைப்படம் இந்தியிலும், ‘கார்த்திகேயா2’ தெலுங்கிலும், கன்னடத்தில் ‘கே.ஜி.எஃப்2’, மலையாளத்தில் ‘சவுதி வெல்லக்கா’ திரைப்படமும் பெற்றுள்ளது.

சிறந்த நடன கொரியோகிராஃபிக்காக ஜானி மற்றும் சதீஷ் தமிழில் தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ மற்றும் கன்னடத்தில் சிறந்த ஆக்‌ஷன் கொரியோகிராஃபிக்காக ‘கே.ஜி.எஃப்2’ படத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னணி இசைக்காக தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த ஒளிப்பதிவிற்காக ‘பொன்னியின் செல்வன்1’ படத்திற்காக ரவி வர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் நடிகைக்கான தேசிய விருதை நித்யா மேனன் ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக வாங்கியுள்ளார். சிறந்த நடிகருக்கான விருது நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு ‘காந்தாரா’ படத்திற்கு கிடைத்துள்ளது. சண்டை பயிற்சியாளர் அவரது அன்பறிவு ’கேஜிஎப் 2’ திரைப்படத்திற்காக பெற்றுள்ளனர்.

இந்த வருடம் ‘பொன்னியின் செல்வன்1’ திரைப்படம் மொத்தம் நான்கு விருதுகளையும், ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

x