நகைச்சுவை நடிகரின் மகன் படிப்பு: கல்விக் கட்டணம் செலுத்திய விஜய்சேதுபதி!


சென்னை: நகைச்சுவை நடிகர் தெனாலி மகனின் படிப்புத் தொகையை நடிகர் விஜய்சேதுபதி செலுத்தியுள்ளார்.

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் உடன் அதிக படங்களில் நடித்தவர் நடிகர் தெனாலி. இவரது மகன் வின்னரசன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பிசியோதெரபி படித்து வருகிறார். இவருக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலை இருப்பதை அறிந்த நடிகர் பாவா லட்சுமணன், நடிகர் விஜய் சேதுபதியிடம் நேரில் அழைத்துச் சென்று நிலைமையை கூறியிருக்கிறார்.

விஷயம் கேள்விப்பட்ட நடிகர் விஜய்சேதுபதி, உடனடியாக கல்வித் தொகை முழுவதும் தானே கட்டுவதாகப் பொறுப்பேற்றிருக்கிறார். இதற்காக ரூ. 76 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கல்லூரியில் கட்டியிருக்கிறார். இதுபற்றி நடிகர் தெனாலி நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டதாவது, “என் சந்ததி கல்வியிலும், வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயர, நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவியை வாழ்நாளில் நானும், என் மகனும் மறக்கவே முடியாது” எனக் கூறியிருக்கிறார்.

x