குழந்தைக்கு விஜய் எனப்பெயர் வைப்பேன்... கேரளா சென்று 'லியோ' பார்த்த கோவை கர்ப்பிணி பேட்டி!


விஜய் ரசிகை ஈஸ்வரி

'லியோ 'படம் பார்க்க கேரளாவிற்கு சென்ற தமிழக கர்ப்பிணி பெண் ஒருவர், பிறக்கும் தனது குழந்தைக்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பேன் என்று கூறியுள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம், தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்டவற்றிலும் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில், அண்டை மாநிலங்களில் காலை 4 மணிக்கே காட்சிகள் திரையிடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான ரசிகர்கள் கேரளாவிற்கு சென்று படத்தை ரசித்து வருகின்றனர்.

திரையரங்கில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்.

அந்த வகையில் கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு சென்ற கர்ப்பிணி ஒருவர் லியோ படத்தை பார்த்து ரசித்தார். ஈஸ்வரி என்ற அவர் தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் தீவிர விஜய் ரசிகை எனவும், தனக்குப் பிறக்க உள்ள குழந்தைக்கு விஜய் என்று என்று பெயர் சூட்ட உள்ளதாகவும் தெரிவித்தார். இது அங்கிருந்த ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

x