வெறித்தனமான ஒர்க்கவுட்... ஜோதிகாவின் ‘வேற லெவல்’ வீடியோ!


நடிகை ஜோதிகா வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

நடிகை ஜோதிகா தற்போது மும்பையில் வசித்து வருகிறார். பாலிவுட் படங்கள், வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வரும் இவர், உடற்பயிற்சி செய்வதிலும் தீவிர ஆர்வம் காட்டும் ஜோதிகா, அவ்வப்போது தனது ஒர்க்கவுட் வீடியோ மற்றும் பயணம் செல்லும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இன்று சுதந்திர தின வாழ்த்து சொல்லி வெறித்தனமான ஒர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த வீடியோவுக்கு கேப்ஷனாக, ‘இந்த சுதந்திர தின நாளில் உங்களது உண்மையான சுதந்திரத்தைக் கண்டுபிடியுங்கள்’ என்றும் கூறியிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றுக்கு ஜோதிகா அணிந்து வந்திருந்த உடை இணையத்தில் பேசுபொருளானது. ஆனால், ’இன்னும் பெண்களின் ஆடை பற்றியே எவ்வளவு நாட்கள் சர்ச்சையக் கிளப்புவீர்கள்?’ என்று ஜோதிகாவுக்கு ஆதரவும் குவிந்தது. மும்பையில் தனது பெற்றோருக்காகவும் குழந்தைகளின் படிப்புக்காகவும் கடந்த சில மாதங்களாக வசித்து வரும் ஜோதிகா எப்போது சென்னை திரும்புவார், தமிழ் படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

A post shared by Jyotika (@jyotika)

x