அரசியல் கட்சியில் இணைகிறீர்களா?... நடிகை ஸ்ருதிஹாசன் அதிரடி பதில்!


நடிகை ஸ்ருதிஹாசன்

தந்தையைப் போல அரசியலில் நுழையப் போகிறீர்களா என்ற கேள்விக்கு நடிகை ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார்.

கோவையில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையின் திறப்பு விழாவில் நடிகை ஸ்ருதி ஹாசன் கலந்து கொண்டார்.

இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் வழக்கமாக கருப்பு நிற உடை, மார்டன் உடை தான் அணிவேன். எனக்கு பெரும்பாலும் எனது தந்தை தான், புடவைகளை பரிசளித்திருப்பார். ஆனால் அவர் பெரும்பாலும் மஞ்சள் வெள்ளை நிறத்தில் புடவை எடுப்பார். நான் அவரிடம் கருப்பு அல்லது கருநீலம் நிறத்தில் புடவைகள் எடுத்து தரும்படி கேட்பேன்" என்றார்.

நடிகை ஸ்ருதி ஹாசன்

அப்பாவை வைத்து படம் இயக்குவதை எதிர்பார்க்கலாமா என்ற ஸ்ருதி ஹாசனிடம் கேட்டதற்கு,, "ஐய்யைய்யோ! எனக்கு தலை சுற்றுகிறது. அவருடன் யாருமே போட்டி போட முடியாது" என்று பதிலளித்தார்.

நடிகை ஸ்ருதி ஹாசன்

அரசியல் ஈடுபாடு குறித்தும், வருங்காலத்தில் கட்சியில் யாருடனாவது இணைவீர்களா என்ற கேள்விக்கு, 'இல்லை' என ஒரே வார்த்தையில் பதிலளித்தார். தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் இந்திய பெண் கதாபாத்திரத்தை எடுத்து நடித்திருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது எனவும் அதுமட்டுமின்றி அந்த படத்தில் இயக்குநர், தயாரிப்பாளர், வசனக்கர்தா அனைவருமே பெண்கள் என்பதால் அது போன்ற ஒரு குழுவுடன் இணைந்தது மிகவும் அழகான ஒன்றாக அமைந்துள்ளது என்றும் ஸ்ருதி ஹாசன் கூறினார்.

x