நிமிஷா சஜயனின் புதிய படம் ‘என்ன விலை’


‘சித்தா', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படங்களில் நடித்துள்ள மலையாள நடிகையான நிமிஷா சஜயன், இப்போது நடித்துள்ள படத்துக்கு ‘என்ன விலை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சஜீவ் பழூர் இயக்கும் இதில் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன், ராஜேந்திரன், விஜயலட்சுமி, பிரவீனா, கமலேஷ், கோலிசோடா பாண்டி, ஜே.எஸ்.கவி, மோகன் ராம், நிழல்கள் ரவி உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். ஜிதேஷ் விதயாரிக்கும் இதன் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. சஜீவ் பழூர் கூறும்போது, ‘இந்தப் படம் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்” என்றார்

x