விக்னேஷ்சிவனுக்கு டாட்டா பை... பை... நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு?


நயன்தாரா, விக்னேஷ்சிவன்

தனது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் இருந்து அதிரடியாக விலக நடிகை நயன்தாரா முடிவெடுத்துள்ளார். இந்தத் தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நயன்தாரா

'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை அடுத்து அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு விக்னேஷ் சிவன் கதையில் திருப்தி இல்லாததால் அந்தப் படத்தில் இருந்து அவர் விலகினார். இதையடுத்து தற்போது ’லவ் டுடே’ படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதனை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.

கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டப் பலர் இந்தப் படத்தில் நடித்து வரும் நிலையில், படத்திற்கு ’எல்ஐசி’ (’லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’) என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

ஆனால், இந்த தலைப்பு தனக்கு சொந்தமானது என்று ஏற்கெனவே இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் கூறி வந்த நிலையில், தற்போது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி நிறுவனமும் இந்த தலைப்பை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நயன்தாரா, விக்னேஷ் சிவன்

இந்தப் பிரச்சினைகள் குறித்து படக்குழுவினர் மெளனம் காத்து வருகின்றனர். படம் குறித்த அறிவிப்பு வெளியான போதே, படத்தில் பிரதீப்புக்கு நயன்தாரா அக்காவாக நடிக்கப் போகிறார் என்றும் இவர்களுக்கு அப்பா கதாபாத்திரத்தில் சீமான் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இப்படியான சூழலில், நயன்தாரா இந்தப் படத்தில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ஜவான்’ படத்தின் பாலிவுட் எண்ட்ரி மூலம் தனது சம்பளத்தை நயன்தாரா ரூ.12 கோடியாக உயர்த்தி விட்ட நிலையில், இதே சம்பளத்தை ‘எல்ஐசி’ படத் தயாரிப்பாளர்களிடமும் கேட்டுள்ளார். ஆனால், படத்தின் பட்ஜெட் நயன்தாரா சம்பளத்தால் அதிகமாகிவி டும் என்பதால், வேறு ஹீரோயினைத் தேர்ந்தெடுக்கலாம் எனச் சொல்லி இருக்கிறாராம் தயாரிப்பாளர் லலித்.

இதனால், நயன்தாரா இந்தப் படத்தில் இருந்து விலகுவதாகவும் இன்னும் சிலர் சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...
அமைச்சர் உதயநிதிக்கு சம்மன்... விசாரணைக்கு ஆஜராக உத்தரவு! நீதிமன்றம் அதிரடி!

வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மோதல்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

போர் மூளும் அபாயம்... ஈரான் உள்ளே புகுந்து பாகிஸ்தான் விமானப்படை பதில் தாக்குதல்!

x