‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்திற்காக மகன்களுடன் இணைந்து டப்பிங் பேசிய ஷாருக்கான்!


மும்பை: நடிகர் ஷாருக்கான் தனது மகன்கள் ஆர்யன் கான் மற்றும் ஆப்ராம் கான் ஆகியோருடன் இணைந்து டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் இந்தி பதிப்பிற்கு குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குநர் பாரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொழுதுபோக்கு திரைப்படம் இந்தியாவில் 20ம் தேதி டிசம்பர் 2024 அன்று, ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் கதாபாத்திரங்களை உயிர்ப்பிக்கும் விதத்தில் ஷாருக்கான் மற்றும் அவரது மகன்கள் ஆர்யன் கான் மற்றும் ஆப்ராம் ஆகியோர் டப்பிங் பேசியிருக்கின்றனர்.

கடந்த 2019ல் வெளிவந்த ‘தி லயன் கிங்’ படத்திற்கு ஷாருக்கான் குரலுதவி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது ஷாருக்கான் தவிர, அவரது மகன்கள் - ஆர்யன் கான் சிம்மவாகவும் , ஆபிராம் கான் இளைய முஸாபாவாகவும் குரல் கொடுத்துள்ளனர். இதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

படம் பற்றி ஷாருக்கான் பேசுகையில், "காட்டின் ராஜா முஃபாசா உயர்வான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும். அதற்கு இந்தியில் குரலுதவி செய்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனது மகன்களும் இப்பணியில் பங்கேற்றது எனக்குப் பெருமை” என்றார். ’முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் டிசம்பர் 20, 2024 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும்.

x