'கங்குவா’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!


நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சிறுத்த சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது. படத்தின் போஸ்டர்களும் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று இயக்குநர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாளையொட்டி கங்குவா படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

இதில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். வில்லன் பாபி தியோலுக்கும் சூர்யாவுக்கும் இடையிலான போர்க்காட்சிகளை மையப்படுத்தியே டிரெய்லர் வெளியிட்டிருக்கிறார்கள். மிரட்டும் பேச்சு, கங்குவாவை அழிக்க துடிக்கும் வன்மம் என மிரட்டுகிறார் பாபி தியோல்.

இன்னொரு பக்கம் முறுக்கேறிய உடம்பு, தன் மக்களை காக்கும் பொறுப்பு என கங்கனாக திரையை ஆக்கிரமிக்கிறார் சூர்யா. படத்தில் விஎஃப்எக்ஸ் காட்சிகளும் சூர்யா பேசும் வசனங்களும் சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் ட்ரெய்லரை வைரலாக்கி வருகின்றனர். நிச்சயம் ‘கங்குவா’ ரசிகர்களுக்கு விஷூவல் ட்ரீட்டாக இருக்கும் எனக் கூறி பலரும் ட்ரெய்லரைப் பகிர்ந்து வருகின்றனர். இந்தப் படத்தில் நடிகர் கார்த்தியும் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், டிரெய்லரின் இறுதியில் வரும் உருவம் அவர்தானா என டிகோட் செய்து வருகின்றனர் இணையவாசிகள்.

x