'கோட்’ படத்தின் டிரெய்லர் தேதி; ரசிகர்கள் குஷி!


நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தின் டிரெய்லர் தேதி குறித்தான செய்தி வெளியாகியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் ‘கோட்’ படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. அப்பா- மகன் என விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் படத்தில் இருந்து விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் என நால்வரும் இருக்கும் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு டிரெய்லர் வெகு விரைவில் வர இருக்கிறது என்பதைத் தெரிவித்து இருந்தனர்.

தற்போது ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று படக்குழுவினர் டிரெய்லரை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தின் பாடல்கள், போஸ்டர்கள், விஜயின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் போன்றவை ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியே ஏற்படுத்தி, சமூக வலைத்தளங்களிலும் நெகட்டிவ் விமர்சனங்களையே சந்தித்தது. இதனால், விஎஃப்எக்ஸ் காட்சிகளை சரிசெய்யும் பணியில் வெங்கட்பிரபு மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த குறைகளை எல்லாம் சரிசெய்தே படத்தின் டிரெய்லரை வெங்கட்பிரபு வெளியிடுவார் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

x