சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாகிறார் காஜல் அகர்வால்... இயக்குநர் இவரா?


காஜல் அகர்வால்

திருமணத்திற்கு பின் காஜல் அகர்வால் நடிக்கவே மாட்டார் என கூறப்பட்டது. ஆனால், திருமணமாகி குழந்தை பெற்ற பின் நடிப்பில் மீண்டும் முழு மூச்சாக இறங்கியுள்ளார் காஜல். ‘இந்தியன் 2’, ‘பகவந் கேசரி சத்யபாமா’ என தொடர்ந்து பல படங்களை அவர் கைவசம் வைத்துள்ளார். இந்த படங்களை தவிர்த்து தற்போது வில்லியாக புதிய படம் ஒன்றில் அவர் நடிக்க உள்ளாராம்.

காஜல் வில்லியாக நடிக்கவுள்ள படத்தில் ஹீரோவாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தான் நடிக்கிறார். ஆம், ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்தில் தான் காஜல் அகர்வால் வில்லியாக நடிக்கவுள்ளாராம். ஏற்கெனவே ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘மகதீரா’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த காஜல் தற்போது அதே ராஜமௌலி இயக்கத்தில் வில்லியாக நடிக்கவுள்ளார்.

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி

காஜல் அகர்வால் நடிக்கவிருக்கும் இந்த வில்லி ரோலில் முதன் முதலில் ஐஸ்வர்யா ராய்யை தான் நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்துள்ளது. ஆனால், ஐஸ்வர்யா ராய்யால் நடிக்கமுடியாமல் போக, தற்போது அவருக்கு பதிலாக காஜல் அகர்வாலை கமிட் செய்துள்ளனர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

x