நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகை ராதா கதறி அழுதுள்ளார். மேலும், விஜயகாந்த் குறித்தான நினைவுகளையும் அவர் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவில் இறுதி நிகழ்வின் போது கலந்து கொள்ள முடியாத பல பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், சூரி எனப் பலரும் நேரில் வந்தனர். இந்த நிலையில், நடிகர் விஜயகாந்துடன் 'அம்மன் கோவில் கிழக்காலே’, ‘மனக்கணக்கு’ உள்ளிட்டப் பல படங்களில் இணைந்து நடித்த நடிகை ராதா அவரது நினைவிடத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பின்பு, பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, “விஜயகாந்த் மிகவும் தன்மையான நபர். அவருடைய பிறந்தநாளின் போது தொலைபேசியில் பேசுவேன். சமீபத்தில், என்னுடைய மகள் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்கப் போயிருந்தேன்.
விஜயகாந்த் சாரை பார்க்க முடியவில்லை. பிரேமலதாவிடம் தான் கொடுத்திருந்தேன். அவ்வளவு கஷ்டத்திலும் கூட பிரேமலதா என் மகள் கல்யாணத்திற்கு முந்தின நாள் வந்திருந்தார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. நிச்சயம் அவருடைய ஆசீர்வாதத்தோடுதான் வந்திருப்பார். அவரை இந்த நிலையில் வந்து பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. அவர் செய்த நல்ல விஷயங்கள் எப்போதும் நம்முடனேயே இருக்கும்” என கண்ணீர் மல்க பேசினார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் நெல்லை வரை பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
‘இந்தியாவின் 4 சங்கராச்சாரியார்களும், ராமர் கோயில் விழாவை புறக்கணித்திருக்கிறார்கள்’
சென்னையில் அயலகத் தமிழர் தினவிழா: 58 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பு!
'ஜாலியாக இருக்கலாம்... தனியாக வா' 9-ம் மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆசிரியர்!
ப்பா... திக்குமுக்காடி போன ரசிகர்கள்... வைரலாகும் நடிகையின் போட்டோஷூட்!