இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் இணையும் ஜூனியர் என்டிஆர்: படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?


மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், நடிகர் ஜூனியர் என்டிஆர், இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் அடுத்து இணையும் ஆக்‌ஷன் திரைப்படம் 'என்டிஆர் நீல்' பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது.

'கே.ஜி.எஃப்', 'சலார்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் நடிகர் ஜூனியர் என்டிஆர் புதிய படம் ஒன்றில் கைக்கோர்க்கிறார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படம், தற்காலிகமாக 'என்டிஆர்நீல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. ஜூனியர் என்டிஆர் மற்றும் இயக்குநர் நீல் தங்களது குடும்பத்தினருடன் இந்த பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டனர்.

இந்தப் படம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகும் என வெளியீட்டுத் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சங்கராந்தியை முன்னிட்டு இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜனவரி 9, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிளாக்பஸ்டர் ஹிட்களுக்கு பெயர் போன இயக்குநர் பிரஷாந்த் நீல், தனது தனித்துவமான மாஸ் விஷன் மூலம் ஜூனியர் என்டிஆரின் திரை இருப்பை புதிய உயரத்திற்கு எடுத்து செல்வார் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

x