ஹீரோவான பிக் பாஸ் அமீர்


பிக் பாஸ் அமீர் நாயகனாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. பி.டி.தினேஷ் இயக்குகிறார். இவர் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையாவிடம் பணியாற்றியவர்.

ஸ்டைஸ் பிலிம் மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியதர்ஷினி, ஜித்தன் ரமேஷ், இயக்குநர் பேரரசு, சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், சமீர் தர்ஷன், காதல் சுகுமார் என பலர் நடிக்கின்றனர். ஆர்.ரவீன்ஒளிப்பதிவு செய்கிறார். சாய் பாஸ்கர், அபுபக்கர் இசை அமைக்கின்றனர்.

x