இந்த விஷயத்திற்காக ‘அயலான்’ படத்தில் பதற்றமானேன்: இயக்குநர் ரவிக்குமார்!


இயக்குநர் ரவிக்குமார்

ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் உள்ளிட்டோர் நடிப்பில் ‘அயலான்’ படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதன் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் ரவிக்குமார் பேசியதாவது, “’அயலான்’ படத்திற்கு நீண்ட வருடம் காத்திருந்த காலக்கட்டம் குறித்து அனைவரும் பேசினார்கள். இதை மிதமாக கடந்து வர உதவியது என் குடும்பமும் நண்பர்களும்தான். இதற்கு பின்பு மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தவர் சிவகார்த்திகேயன். அவர் இந்தக் கதையின் மீது வைத்த நம்பிக்கையில்தான் இத்தனை வருடம் பல சவால்களைக் கடந்து பயணித்து வந்தோம்.

’அயலான்’ படக்குழுவினர்...

ரஹ்மான் சார்தான் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் என்று சொன்னபோது மகிழ்ச்சியாகவும் பதற்றமாகவும் இருந்தது. அவர் மாதிரியான லெஜெண்டுடன் எப்படி பணிபுரியப் போகிறோம் என்று நினைத்தேன். ஆனால், ரஹ்மான் சார் நிறைய சுதந்திரம் கொடுத்துள்ளார். ரஹ்மான் சாரின் ரசிகன் நான். அவர் என் படத்திற்கு இசையமைத்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

x