பிக் பாஸ் செல்வதற்கு முன்பே 2 படங்களில் ஹீரோயினான ஜோவிகா... வனிதா விஜயகுமார் தகவல்!


ஜோவிகா

பிக் பாஸ் இல்லத்திற்குள் செல்வதற்கு முன்பே தன் மகள் ஜோவிகா 2 படங்களில் ஹீரோயினாக கமிட்டாகி விட்டார் என வனிதா விஜயகுமார் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் இல்லத்திற்குள் ஜோவிகா போட்டியாளராக நுழைந்துள்ளார். அவர் படிப்பில் தனக்கு ஆர்வம் இல்லாததால், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடிக்க முயற்சி செய்து வருவதாகக் கூறினார். மேலும், மேடையில் ஜோவிகாவை கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய போது, அவர் ஒரு டெக்னீஷியன் எனவும் கூறினார்.

தற்போது தனது மகள் ஜோவிகாவை பற்றிய பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை யூடியூப் சேனல் ஒன்றில் வனிதா விஜயகுமார் பகிர்ந்து கொண்டார். அதில், ”இயக்குநர் பார்த்திபனிடம் கடந்த சில மாதங்களாக உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார் ஜோவிகா. மேலும், தன்னிடம் இரண்டு கார்கள் இருந்தாலும் நான் ஜோவிகாவை மெட்ரோ ரயிலில் தான் பார்த்திபன் அலுவலகத்துக்கு அனுப்புவேன்.

வனிதா தன் மகள்களுடன்...

அப்படி போனால் தான் அவளுக்கு உதவி இயக்குநர்களின் கஷ்டம் என்ன என்பது புரியும் என்பதால் அப்படி செய்தேன். நானும் பி. வாசுவிடம் 10 படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினேன்” என்றார்.

மேலும் அவர், “ஜோவிகா பிக் பாஸ் செல்லும் முன்னரே இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கவும் கமிட்டாகி விட்டார். ஒரு தமிழ் படம், ஒரு தெலுங்கு படத்தில் ஜோவிகா ஹீரோயினாக நடிக்க கமிட்டான பின்புதான் அவர் பிக் பாஸுக்கு சென்றுள்ளார். இதை சொல்வதில் எனக்குப் பெருமை” என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

x