படப்பிடிப்பிற்காக காஞ்சிபுரம் வந்த நடிகை நயன்தாராவைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குநராக அவதாரம் எடுக்கும் படம் ‘டெஸ்ட்’. இதில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். இதில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பிற்காக காஞ்சிபுரத்தில் உள்ள ஜூரகரேஸ்வரர் கோயிலில் நயன்தாரா கலந்து கொண்டார். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், நயன்தாரா வந்திருப்பதை அறிந்த அங்கிருந்த ரசிகர்கள் அவரைப் பார்க்க கோயில் முன்பாக கூடினர்.
இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்களைப் பார்த்து கையசைத்து விட்டு காவல்துறை உதவியோடு நடிகை நயன்தாரா கேரவனுக்குக் கிளம்பிச் சென்றார். இந்த காணொலி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாதவன் ஜோடியாக நயன்தாரா நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
கனமழை எதிரொலி... அண்ணாமலை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!
பத்திரம் மக்களே... இன்று 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
மழையால் பாதிப்பு... சென்னை புத்தகக்காட்சிக்கு இன்று விடுமுறை!
தமிழகத்தில் ஜன.12ம் தேதி பலூன் திருவிழா!
நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம்... இன்று தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை!