லியோ டிரெய்லர் படைத்த புதிய சாதனை: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்


லியோ படத்தில் விஜய்

நடிகர் விஜய்யின் ‘லியோ’ பட டிரெய்லர் புதிய சாதனை படைத்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் இந்த மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளது. இதன் டிரெய்லர் நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. வெளியான ஐந்து நிமிடங்களிலேயே இந்தப் படம் ஒரு மில்லியன் பார்வைகளை யூடியூப் தளத்தில் பெற்றது. தற்போது டிரெய்லர் வெளியாகி 17 மணி நேரம் ஆகும் நிலையில், 30 மில்லியன் பார்வைகளைப் பெற்று யூடியூப் தளத்தில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இதற்கு முன்பு விஜய்யின் ‘பிகில்’ டிரெய்லர் வெளியான 58 நிமிடங்களில் ஒரு மில்லியன் லைக்ஸ் பெற்றது. ஆனால், ’லியோ’ டிரெய்லர் வெளியான 20 நிமிடங்களிலேயே ஒரு மில்லியன் லைக்ஸைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. ‘பிகில்’ சாதனையை முறியடித்தது மட்டுமல்லாது, இந்திய சினிமாக்களிலேயே இவ்வளவு வேகத்தில் அதிக பார்வைகளையும் லைக்ஸையும் பெற்ற படம் ‘லியோ’தான் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x