லியோ டிரெய்லருக்கு விஜய் தந்த ரியாக்‌ஷன்... தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்


’லியோ’ தயாரிப்பாளர் லலித்துடன் விஜய்

’லியோ’ திரைப்படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி உண்டா என படத்தின் தயாரிப்பாளர் லலித் தகவல் பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய்யின் ‘லியோ’ படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியான நிலையில், படம் குறித்து இதன் தயாரிப்பாளர் லலித் நேற்று இரவு ட்விட்டர் ஸ்பேசில் பேசியுள்ளார். ரசிகர்களுடன் அவர் பகிர்ந்திருப்பதாவது, ”படத்தின் டிரெய்லரை எடிட் செய்யும்போது நானும், லோகேஷும் இருந்தோம். டிரெய்லர் முடித்துவிட்டு விஜய் சாருக்கு அனுப்பினோம். அதைப் பார்த்துவிட்டு 'ஓகே நல்லா இருக்கு' என்று சொன்னார்.

’லியோ’ விஜய்

அந்த ஹைனா மிருக படப்பிடிப்பின்போது விஜய் சார் 1000 ஜூனியர் ஆர்டிஸ்டுக்கு மத்தியில் எதுவுமே இல்லாமல் ஹைனா இருப்பதுபோல் கற்பனை செய்து நடித்தார். பின்பு, கிராஃபிக்ஸில்தான் ஹைனா மிருகம் சேர்க்கப்பட்டது. 'லியோ' லோகேஷின் 'LCU'வில் இணையுமா என்பதை படத்தில் சஸ்பென்ஸாக கடைசிவரை வைத்துள்ளோம். படம் பார்த்து எல்லோரும் தெரிந்து கொள்வீர்கள்.

’லியோ’ படக்குழு...

உலகம் முழுவதும் 25000 - 30000 திரையில் ’லியோ’ படத்தை வெளியிடவுள்ளோம். காலை 4 மணி காட்சிக்காக அரசிடம் அனுமதி கேட்டு வருகிறோம். அதுகுறித்த அப்டேட் இந்த வாரம் வந்துவிடும். இந்த முறை வங்கதேசத்திலும் 'லியோ' வெளியாகும். அதற்கான பணிகளும் நடந்து வருகிறது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!

x