நடிகர் அஜித் குமார் சூப்பர் பைக் சுற்றுலா தொடர்பாக தான் துவங்கி உள்ள நிறுவனத்திற்கு 'வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்' என்று பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித்குமார் பைக் ரேஸ் பிரியரும் கூட. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் சூப்பர் பைக் ஒன்றில் சுற்றி வந்த அவர் நாட்டின் முக்கியமான சுற்றுலா தளங்களை பார்வையிட்டு இருந்தார். இதை தொடர்ந்து விரைவில் சூப்பர் பைக்கில் சுற்றுலா செல்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில் புதிய நிறுவனம் ஒன்றை துவங்க இருப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது அந்த புதிய நிறுவனத்திற்கு ’வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்’ என்ற பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அறியப்படாத இடங்களை பார்க்க விரும்புபவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை இந்த நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சினிமா, பைக் ரேஸ், கார் ரேஸ் ஆகியவை மட்டுமின்றி ஆளில்லா விமானங்கள் என்று சொல்லப்படும் ட்ரோன்கள் குறித்தும் அஜித்குமார் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!
ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!