விஜய் பட வில்லனுக்கு அரியவகை நோய்: ரசிகர்கள் அதிர்ச்சி!


நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனக்கு அரிய வகை நோய் பாதிப்பு இருப்பதாகக் கூறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் நடிகை ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜயின் ‘பீஸ்ட்’ மற்றும் லாரன்ஸின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திலும் நடித்திருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில், இந்த வருடத் தொடக்கத்தில் தனது நீண்ட நாள் தோழியான தனுஜா என்பவரைத் திருமணம் செய்ய இருப்பதாகக் கூறி நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார்.

ஆனால், இப்போது தனுஜாவுடன் பிரேக்கப் எனவும், தான் மீண்டும் சிங்கிள் என்பதையும் கூறி இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வருத்தத்தை சொல்லி வந்தனர். இந்நிலையில், ஏடிஹெச்டி என்ற அரியவகை வியாதியால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார் ஷைன் டாம் சாக்கோ.

இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கவனக்குறைவாகவோ அல்லது பிறரது கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களாகவோ இருப்பார்கள். இது பற்றி பெரிதாக தான் கவலைப்படவில்லை என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார் ஷைன். இதற்கு முன்பு நடிகர் பஹத் ஃபாசில் இந்த வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

x