‘GOAT' படத்தின் கதை இதுவா? - இணையத்தில் தீயாய் பரவும் தகவல்


சென்னை: ‘GOAT' படத்தின் கதை இதுதான் என ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

நடிகர் விஜயின் ’GOAT' படம் அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். யுவன் இசையில் படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியான போதே படத்தின் கதை குறித்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இப்போது ’GOAT' படத்தின் கதை இதுதான் என இணையத்தில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

அதாவது, கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த மாஸ்கோ மெட்ரோ குண்டுவெடிப்பை மையமாகக் கொண்ட கதை இது. கூட்டம் நிறைந்த சப்வே பாதையில் குண்டு வைத்து பலரது உயிரை பலி வாங்கும் ஒருவனைத் தேடித்தான் இந்த கதை இருக்கும் என சொல்லப்படுகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஆக்‌ஷன், சேஸிங்கிற்கு பஞ்சமில்லாமல் பரபரவென ’GOAT' படம் நகரும் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

x