மீண்டும் அஜித்துடன் ஜோடி சேரும் த்ரிஷா: ரசிகர்கள் குஷி


சென்னை: நடிகர் அஜித்துடன் த்ரிஷா மீண்டும் ஜோடி சேர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த ஜோடியாக அஜித்- த்ரிஷா ஜோடி இருக்கிறது. ‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்டப் பல படங்கள் த்ரிஷா- அஜித் இணைந்து நடித்திருக்கிறார்கள். பல வருடங்கள் கழித்து இவர்கள் ‘விடாமுயற்சி’ படத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை முடித்த கையோடு அஜித்தின் அடுத்தப் படத்திலும் த்ரிஷா அஜித்துக்கு ஜோடி சேர இருக்கிறார் என்ற தகவல்தான் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

’விடாமுயற்சி’ படத்திற்கு அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 270 கோடி பட்ஜெட் இந்தப் படத்திற்கு செலவிடுவதாகவும் சொல்லப்படுகிறது. இதில்தான் த்ரிஷா அஜித்திற்கு ஜோடி சேர்ந்துள்ளார். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

x