மாஸாக தொடங்கியது ‘புஷ்பா2’ கிளைமாக்ஸ் ஷூட்!


நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தொடங்கியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ திரைப்படம் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. இந்த மாதம் ஆகஸ்ட் 15ம் தேதி படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர், இந்த வருட இறுதியில் டிசம்பர் மாதம் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், படப்பிடிப்பு இன்னும் முடிவடையாததால் இந்த வருட இறுதியிலும் படம் வெளியாவது சந்தேகம் என தகவல் வெளியானது. இதைப் பற்றி படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில், கிளைமாக்ஸ் போர்ஷனுக்கான படப்பிடிப்பு மாஸான ஆக்‌ஷன் காட்சியுடன் தொடங்கியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இதோடு சொன்னபடி டிசம்பர் 6ம் தேதி படம் வெளியாகும் எனவும் உறுதிப்படுத்தி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது படக்குழு.

x