கிடப்பில் போடப்படுமா ‘எஸ்.டி.ஆர்.48’? சிம்புவின் புதுபட அப்டேட்!


’தக் லைஃப்’ படத்தை அடுத்து நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் புதிய படம் குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிலம்பரசன் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் தனது போர்ஷனுக்கான டப்பிங்கைத் தொடங்கியவர் அதனையும் விறுவிறுப்பாக முடித்துக் கொடுத்திருக்கிறார். ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘எஸ்.டி.ஆர்.48’ படம் பற்றிய அப்டேட் இன்னும் வராமல் இருக்கிறது. இந்த நிலையில், சிம்பு நடிக்கும் அடுத்தப் படம் குறித்த தகவல் வந்திருக்கிறது.

மலையாளத்தில் ‘2018’ படம் மூலம் பிரபலமான இயக்குநர் ஜூட் ஆண்டனி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது சிம்புவின் ஐம்பதாவது படம் என்பதால் பிரம்மாண்ட கதை, பட்ஜெட் என பக்காவாக படம் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.

ஜூட் ஆண்டனியும் அதற்கேற்றாற்போல கதை சொல்லி சிம்புவை இம்ப்ரஸ் செய்திருக்கிறார். விரைவில் இதன் அப்டேட் எதிர்பார்க்கலாம். இந்தப் படம் முடித்தப் பிறகே ’எஸ்.டி.ஆர்.48’ தொடங்கும் என்றும் சொல்கிறார்கள். ஆனால், ‘எஸ்.டி.ஆர்.48’ அறிவித்து இத்தனை மாதங்கள் ஆகியும் படம் நகராமல் இருப்பதால் அந்தப் படம் தொடங்குமா அல்லது கிடப்பில் போடப்படுகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

x