ஆஸ்கருக்குள் நுழைந்தது தனுஷின் ‘ராயன்’ - குவியும் வாழ்த்து!


சென்னை: நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்தின் திரைக்கதை ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடிக்கத் தேர்வாகியுள்ளது.

நடிகர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமாக ‘ராயன்’ வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தனுஷே இயக்கி, நடித்திருக்கிறார். படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இதன் வசூல் ரூ.60 கோடியை எட்டியுள்ளது. விரைவில் ரூ.100 கோடி வசூலை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘ராயன்’ படத்தின் திரைக்கதை, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் இடம்பிடிக்கத் தேர்வாகியுள்ளது. இந்த விஷயம் தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு, ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தின் திரைக்கதை தேர்வானது குறிப்பிடத்தக்கது.



x