நிவாரண பணியில் நிகிலா விமல்: வயநாடு நிலச்சரிவு


கேரளாவில் திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சில தினங்களுக்கு முன் கனமழை பெய்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் நிலச்சரிவும், வெள்ளமும் ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு மீட்பு பணிகள்தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வீடுகள், உடைமைகள், உறவினர்களை இழந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் கண்ணூர் மாவட்டம் தலிபரம்பா தாலுகாவில் உள்ள நிவாரண முகாமில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் சேர்ந்து நடிகை நிகிலா விமலும் உதவிகள் செய்து வருகிறார். இது தொடர்பான வீடியோ வேகமாக பரவிவருகிறது. நிகிலா விமலின் சேவையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

மலையாள நடிகையான இவர் தமிழில், கிடாரி, பஞ்சுமிட்டாய், தம்பி, போர்தொழில் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கரோனா காலகட்டத்திலும் நிகிலா விமல், இவ்வாறு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விக்ரம் உதவி: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் விக்ரம் ரூ.20 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

x