நியூ லுக்கில் நடிகர் சிம்பு: வைரலாகும் ஃபோட்டோ


சிலம்பரசனின் புது லுக்

சென்னைக்குத் திரும்பியுள்ள நடிகர் சிலம்பரசனின் புது லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘பத்துதல’ திரைப்படம் இந்த மாதம் 30-ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில், தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பி இருக்கிறார் சிம்பு. நீண்ட நாட்களாகவே ‘பத்துதல’ படத்தின் தோற்றத்தில் சிம்பு வலம் வந்து கொண்டிருந்தார். இதனால், இந்தப் படத்திற்கு அடுத்து சிம்புவை புதிய தோற்றத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

நடிகர் சிம்புவின் புதிய தோற்றம்.

தற்போது சென்னை திரும்பியுள்ள சிம்புவின் புதிய தோற்றம் குறித்தான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையில் நடக்கும் ‘பத்துதல’ படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ’பத்துதல’ படத்தை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

x