யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ‘ஸ்வீட் ஹார்ட்’!


இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் ‘ஸ்வீட் ஹார்ட்’. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், அருணாச்சலம், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதன் டைட்டிலுக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக வீடியோ வரவேற்பை பெற்றுள்ளது. வீடியோ லிங்க்...

x