கார் சேஸிங் காட்சியில் விபத்து: மலையாள நடிகர்கள் காயம்


மலையாள நடிகர்கள் அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப், மேத்யூ தாமஸ் உட்பட பலர் நடிக்கும் படம், ‘புரோமன்ஸ்’. இதை அர்ஜுன் டி ஜோஸ் இயக்குகிறார். இந்தப் படத்துக்காக கடந்த சனிக்கிழமை அதிகாலை கொச்சியிலுள்ள எம்.ஜி.சாலையில் கார் சேஸிங் காட்சி படமாக்கப்பட்டது. வேடிக்கைப் பார்க்க ஏராளமானோர் சாலை ஓரத்தில் கூடியிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மீது மோதி கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த நடிகர்கள் அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப், மேத்யூ தாமஸ், படப்பிடிப்பை வேடிக்கைப் பார்த்த உணவு விநியோகிக்கும் இளைஞர் உட்பட5 பேர் காயமடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

x