'ராயன்' படத்தின் முதல் நாள் வசூல் விவரம்!


சென்னை: நடிகர் தனுஷின் ‘ராயன்’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.

நடிகர் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தைத் தானே இயக்கி நடித்திருக்கிறார். இவருடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். நேற்று வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. வார இறுதி நாட்களில் படத்திற்கான புக்கிங் இன்னும் அதிகமாகும் எனவும் படக்குழு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை வெளியிடும் sacnilk இணையதளம் ‘ராயன்’ படத்தின் வசூல் விவரத்தைப் பற்றி தெரிவித்துள்ளது. அதன்படி, முதல்நாள் மட்டும் ‘ராயன்’ திரைப்படம் ரூ. 12.5 கோடி வசூலைத் தொட்டுள்ளது. இதில் தமிழில் ரூ. 11 கோடியும், தெலுங்கில் ரூ. 1.5 கோடியும் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

x